தேனி மாவட்ட அரசு வாகனம் மதுரை_ யில் விபத்தில் சிக்கியது எப்படி.??
05.01.2023
ஆவணம்;1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பொறுப்புப் பணிபுரியும், தேனி மாவட்ட பேரூராட்சிகளின் செயற்பொறியாளரின் அரசு ஜீப் வாகனம், அரசு அனுமதியின்றி, தேனியிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விபத்திற்குள்ளானாதாகவும், அரசு ஜீப் வாகனத்தை தானே இயக்கிய உதவி இயக்குநர் லேசான காயத்துடனும், உடன் பயணித்த உதவி இயக்குநரின் (டெபுடேசன்)அலுவலக உதவியாளர் ஒருவர் பலத்த காயத்துடனும், மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர் மருத்துவ, மேல்சிகிச்சை பெற்று வருவதாகவும், பொறுப்பு பணிபுரியும் உதவி இயக்குநர் மட்டும் உடனடியாக டிஸ்சார்ஜ் ஆகி, மிகுந்த வலி வேதனையுடன், தேனி மாவட்ட ஆட்சித்தலைவரின் மீட்டிங்கில் பங்கேற்றும், தேனியிலுள்ள தனது அரசு அலுவலகத்திற்கு அவ்வப்பொழுதும், தேனியிலுள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும், அவருக்கு கீழ் பணிபுரியும் இருபத்திரெண்டு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களில் அவரது விசுவாசிகள் மட்டும், அவர் ஓய்வெடுத்துவருகின்ற அவரது வீட்டிற்கு நேரில் சென்று, நலம் விசாரித்தும், ஆறுதல் கூறியும் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவரும், தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக, டெபுடேசனாக, பணிபுரிந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர், எந்த ஊரில் இருந்து வருகிறார்?, எப்படி இருகிறார்?? தற்போது பணியில் உள்ளாரா??? அல்லது விடுமுறையில் உள்ளாரா???? அவரது வருகைப் பதிவேட்டின் நிலைப்பாடு என்ன????? மேலும் தேனி மாவட்டத்திற்குள்ளேயே செயற்பொறியாளரின் ஜீப் வாகனப் பயன்பாடு இருந்திட வேண்டும் என்ற அரசின் அனுமதியும், அறிவுறுத்தலும், சட்டவிதிமுறைகளும் இருந்தும், அவற்றை காற்றில் பறக்கவிட்டு, சட்டவிதிமுறைகளையும், அரசின் நிலையாணைகளையும் கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக, தானே, அரசு ஜீப் வாகனத்தை, தேனி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு, (திருமங்கலத்திற்கு) அரசின் அனுமதியின்றி, தனது சொந்தப் பயன்பாட்டிற்கு, இயக்கிய போது, விபத்து ஏற்பட்டதாகவும்,சேதமடைந்த சம்பவமும், பலத்த காயங்களுடன், மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, உடன் பயணித்த டெபுடேசன் அலுவலக உதவியாளரின் பரிதாப நிலை குறித்தும், முறையாக,தமிழக அரசிற்கும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவிக்காமலும்,, ஏதோ ஒரு இடத்தில் டிங்கர் வேலைக்காக, கடந்த ஒரு வார காலமாக, ஒர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உண்மைநிலை மறைக்கப்பட்டுள்ளதாகவும், சொந்தப்பயன்பாட்டிற்காக விதி மீறலில் பயன்படுத்தப்பட்டு, விபத்துக்குள்ளாகிக இருப்பதாகவும், சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். மேலும் தற்போது விபத்திற்குள்ளான வாகனத்திற்கு பதிலாக, ஹைவேவிஸ் பேரூராட்சி அரசு ஜீப் வாகனத்தை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற தகவலாவது, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தெரியுமா? தெரியாதா?? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.