ஆண்டிபட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி வாலிபர் பலி.....
04.01.2023
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
ஆண்டிபட்டி அருகே உள்ள
T.சுப்புலாபுரத்தில் பாண்டியன் என்பவரது தோட்டத்து கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த நவீன் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றுக்குள்
மூழ்கிவிட்டார்.
காப்பாற்ற முயற்சி செய்தும் அவரது நண்பர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர்
க.கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நவீனை மீட்க போராடி வந்த நிலையில் இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமப் பட்டனர் பின்னர் பொதுமக்களின் உதவியோடு வெளிச்சம் ஏற்படுத்தி நீண்டநேரம் போராட்டத்திற்கு பிறகு நவீன் உடல் மீட்கப்பட்டது தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் அதனை தொடர்ந்து ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.