ஆட்டம் போட்ட திமுக துணை தலைவர்.....ஆப்படித்த விடுதலை சிறுத்தைகள்.....

ஆட்டம் போட்ட திமுக துணை தலைவர்.....
ஆப்படித்த விடுதலை சிறுத்தைகள்.....

தேனி மாவட்டம் நகர்மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர்  ராஜா முகமதுவை நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நகர்மன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சியின் 26 வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ராஜாமுகமது நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் திமுகவை சேர்ந்த ராஜாமுகமது போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் பெரியகுளம் நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவராக திமுகவிலிருந்து வெற்றி பெற்ற ராஜா முகமதுவை நகர்மன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திமுக உறுப்பினர் ராஜாமுகமது நகர்மன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது 26 வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட ராஜா முகமது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் நகராட்சி மீன் கடை உரிமம் பெற்றிருந்ததை மறைத்து தேர்தலில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் தேர்தல் நடத்தும் அலுவலரான பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் நகர்மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான பரிந்துரைக் கடிதத்தை தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் முறையாக தெரு விளக்குகள் எரிவதில்லை சாக்கடை கழிவுகளை அகற்றுவதில் என நகர்மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவகுமார் தெரிவித்தார்.
Previous Post Next Post