திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண் நேற்று தனது தந்தை வருவதற்காக அங்கு காத்துக் கொண்டிருந்தார் . அப்போது திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (24). இவர் தமிழக வெற்றி கழக கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.மேலும் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரும் இவருடைய நண்பர் அசோக் இருவரும் நேற்று இரவு திருவாரூர் பேருந்து நிலையத்தில் சென்று தனியாக நின்று கொண்டிருந்த அந்த இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்துள்ளனர். அந்த நேரத்தில் அவரது தந்தை வந்த உடனே தனது மகளிடம் ஈவ்டீசிங் செய்த ஆனந்தராஜ் மற்றும் அசோக் இருசக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கிக் கொண்டு தனது மகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தில் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் அசோக் ஆகிய இருவர் மீதும் கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூரில் இளம் பெண்ணை ஈவ்டீசிங் செய்த தவெக ஒன்றிய செயலாளர் உட்பட இருவரை திருவாரூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை...
தமிழர் களம் மாத இதழ்
0