திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்ரபாண்டியம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கான உழவர் வயல் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விக்கிரபாண்டியம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 20க்குள் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் விவசாயிகள் கூட்டு இயக்க தலைவர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில் கடந்த வாரம் 50, ஆயிரம் வரை பயிர் கடன் பெற்ற சிறு குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யபடும் என அறிவித்தார். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அந்த வகையில் நேற்று கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி என தமிழக முதலமைச்சர் அறிவித்தார் வார வராம் போராட்டம் நடத்தினால் தான் குறைப்பாரா எனவும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இழிவாக நினைக்க வேண்டாம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளிட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், நகை கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லையெனில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தார். டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையை ஜூன் 20ஆம் தேதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் எடுக்க வேண்டும் குறுவை சாகுபடி தொடங்க தயார் நிலையில் உள்ள நிலையில் விதைக்க இயலாத காரணத்தினால் பிரதமந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பெற்று தர தமிழ்நாடு முதலமைச்சர் முன்வரவேண்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவுத்துறை அமைச்சர் வெங்கடராமன் கூறுகையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாயிகள் யாரும் போராடவில்லை என கூறுவது விவசாயிகள் மத்தியில் வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் வெங்கட்ராமன் நல்ல கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் கண்ணுக்கு தெரியவில்லை என உணவுத்துறை அமைச்சர் பேச்சு … தமிழக முதல்வர் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனை நல்ல கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும் கோட்டூர் விவசாயிகள் …
தமிழர் களம் மாத இதழ்
0