சின்னமனூரில் தேனி வைகை ஜவான் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.!


தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூரில் தனியார் மண்டபத்தில் தேனி வைகை ஜவான் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக அவர்கள் பணியின் போது செய்த சாதனைகளை நினைவு கூறும் வகையிலும் ராணுவ வீரர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 மேலும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஏத்துரைஸ் 488 மதிப்பெண் மற்றும் கூடலூர் சேர்ந்த அமரேஷ் 470 மதிப்பெண் அவர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்கினர்.

 இதன் தொடர்ச்சியாக சங்க நிர்வாகிகள் பணி நிறைவு செய்து வந்த ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர் தொடர்ந்து குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் வாழவும் புதிய தொழில்களை துவங்கி செயல்படுத்தவும் சங்க நிர்வாகிகள் ராணுவ வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள் விழா நிறைவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியை தேனி வைகை ஜவான் ராணுவ வீரர்கள் சங்கம் நிர்வாகிகள் சந்தன மகாலிங்கம் ஜெகன் பாண்டியராஜன் காளிராஜ் செந்தில் கல்யாணசுந்தரம் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.....
Previous Post Next Post