திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள் மற்றும் புற நோயாளிகள் 600 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். QPMS என்ற நிறுவனம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில் மாறி மாறி பணியாளர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் சுமித் நிறுவனத்தின் அராஜக போக்கை கண்டித்தும் பழைய ஆட்களை நீக்கிவிட்டு புதிய ஆட்களை சேர்க்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு பணியை புறக்கணித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பேட்டி
எஸ். பாப்பையன் தொழிலாளர்கள் சங்கம்