டெல்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களை கிரிஷி பவனில் சந்தித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியன் கோரிக்கை மனு அளித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
உழவர் உற்பத்தியாளர் குழுக்களை மேம்படுத்துவதற்கு உரிய நிதி உதவிகள் செய்து வழிகாட்டு நெறிமுறைகளை இலகுவாக்கிட
வேண்டும்.
டி ஏ பி யூரியா உள்ளிட்ட
இடுப் பொருட்களுடன் இணை இடு பொருட்கள் ரூபாய் 700 அளவிற்கு கூடுதலாக விலை கொடுத்து வாங்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
உர பற்றாக்குறையைகபோக்கிட வேண்டும்.
வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வேளாண் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
தமிழகத்திற்கு நெல் கொள்முதலில் ரபி காரிப் பருவத்தை தவிர்த்து தனி கொள்முதல் கொள்கை தமிழகத்திற்கு உருவாக்க வேண்டும்.
தமிழகத்திற்கு நெல் உலர்த்தும் இயந்திரங்கள், வேளாண் அறுவடை, மற்றும் உழவு இயந்திரங்கள் தேவையான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
மணுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் விரைவில் இது குறித்து அனைவரும் அமர்ந்து பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சர் தெரிவித்தார்.
முன்னால் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கே.
இராமசாமி, இயற்கை உழவர் கூட்டமைப்பு
தலைவர் வாழை கருப்பையா,முசிரி யோகநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.