அவகாசம் கேட்பது அதிகாரிகள் தான் கொடுத்த வாக்குறுதி விரைந்து நிறைவேற்றுவேன்
முதலமைச்சர் விஜய் உறுதி
பிஆர் பாண்டியன் தகவல்...
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் தமிழ் நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்களை
தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 25கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்து விவசாயிகளின் பிரச்சனையை எடுத்துரைத்தார் .
பின்ன செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட சட்ட பிரச்சனைகளை நீதிமன்றம் மூலமாக அவசர கால தீர்வு காண்பதற்கு சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.காவிரி காவிரி நடுவர் மன்றம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது- 2007 இல் வழங்கிய தீர்ப்பு தமிழகம் கர்நாடகம் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் செய்த போது நடுவர் மன்றத்தில் தான் முறையிட வேண்டும். நீதிமன்றம் தலையிட முடியாது என்று மறுத்து விட்டனர்.நடுவர் மன்றம் கீழ் பாசன விவசாயிகள் அனுமதி என்று புதிய அணைகளை கர்நாடக கட்ட முடியாது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது - இந்நிலையில் தற்போது மேகதாட்டு அணை கட்டுவதற்கு வரவு திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருப்பது சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த மறுசீராய் மணுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்.
கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை பெற்று தர ஆணையம் முன்வர வேண்டும் ஜூன் 12ல் 100 அடிக்கு மேல் நிரம்பிய பிறகு அணையைத் திறந்து பாசனத்திற்கு விடுவிக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணை 14 2 அடி தேங்கிய பிறகுதான் தண்ணீரை திறக்க வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 136 அடியிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை மண்டலத்திற்கு பாசன பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பேபி அணையை பயன்படுத்தி 152 அடிகொள்ளளவு உயர்த்துவதற்கு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.142 அடி நரம்பிய பிறகுதான் பாசனத்திற்கும் வெள்ளகாலத்திலும் தண்ணீரை விடுவிக்க வேண்டும்.
பனை தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
கடன் தள்ளுபடி செய்வதற்கு முன்னதாக கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி இருப்பதால் அதற்கான உரிய காலம் அவகாசம் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர்
அதிகாரிகள் தான் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்களே தவிர,நான் அவகாசம் கோரவில்லை. எனவே விரைந்து கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.கடன் வசூல் நடவடிக்கை நிறுத்தி வைப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
30நிமிடத்திற்கு மேல் முதலமைச்சர் விவசாயிகளுடன்
கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி, கொங்கு மண்டல தலைவர் ஏ எஸ் பாபு,மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண் சென்னை மண்டலம் சைதை சிவா,நெல்லை மண்டல செயலாளர் மாடசாமி,சேலம் மண்டல செயலாளர் பெருமாள், மலைவாழ் விவசாயிகள் சங்க தலைவர் எம் ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.