மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் அமரர் ஜோதி அவரது நினைவு நாளில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்கி அவரது பிறந்த நாளில் டெல்லிக்கு தரைவழியாக எடுத்துசெல்வது வழக்கம்.
தமிழகத்தில் இருந்து 3-வது ஆண்டாக மே 15-ம் தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலையில் இருந்து தொடங்கி 44 மாவட்டங்கள் வழியாக பெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு மே 21-ம்தேதி காலை வந்தடையும்,
அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் முக்கியதலைவர்களிடம் ஒப்படைத்து மரியாதை செலுத்தப்படும். இந்த ஜோதி காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேருடன், 5 வாகனங்களில் தரைவழி மார்க்கமாக 44 மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு வருகை தந்த 35 ஆம் ஆண்டு ராஜீவ் அமரர் ஜோதிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ரங்காபூபதி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதில் நகர பொறுப்பாளர் சத்தீஷ்குமார் முன்னிலை வகித்தார்.இதில் வழக்கறிஞர்கள் விஜயன், சிவா,அஜிஸ் வட்டாரத் தலைவர் முப்புளி கோவிந்தன் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி , கனகராஜ்,கார்த்திக் ,உதய ஆனந்தன் அருமைச் செல்வம், சுரேஷ், சாமிநாதன், ஜனார்த்தனன், மதன்குமார் மெடிக்கல் வெங்கட் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.