போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வலியுறுத்தி மன்னார்குடி , கூத்தாநல்லூர் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருந்து கடையடைப்பு

மன்னார்குடி       20.05.2026 

ஆன்லைன் இன்டர்நெட் மருந்து .வியாபாரத்தை நிறுத்த கோரி , தமிழகத்தில் மருந்து வணிகர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு  அதன் ஒருபகுதியாக  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி , கூத்தாநல்லூர் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் கடை அடைக்கப்பட்டுள்ளது  போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும்  உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாபம் சதவீதங்களையும் அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திட  வேண்டும் ,  ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் ,  கலாச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும்  மத்திய  அரசின் மருந்துகள் கட்டுபாடுதுறை ஆன்லைன் மூலம் மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்காமல் மெத்தனமாக இருப்பதை  கண்டித்து   மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து  நாடு  முழுவதும்  மருந்து  வணிகர்கள் சங்கம் சார்பில்  இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

FILE NAME :  TVR MANNARGUDI MEDICAL SHOP CLOSED NEWS 20.05.2026
Previous Post Next Post