மன்னுயிர் எல்லாம் தொழும் – குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தில் சிறப்பு உரை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் “மன்னுயிர் எல்லாம் தொழும்” என்ற தலைப்பில் சிறப்பு உரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார். சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் கேசவமூர்த்தி, ராஜகோபாலன்,ரெயின்போ காமராஜ், பன்னீர்செல்வம், முருகன், திருக்குறள் பங்கஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு “மன்னுயிர் எல்லாம் தொழும்” என்ற தலைப்பில் விரிவாக கருத்துரையாற்றினர். மனிதநேயம், உயிர்களிடத்திலான அன்பு, இயற்கை பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.
கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சார்பில் பரிசுப் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், கோடைக்காலத்தில் நூலகத்திற்கு தொடர்ந்து வருகை தந்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஜமுனா நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் தீபா, ஈஸ்வரி, வரதராஜன், மகாலட்சுமி, தேன்மொழி உள்ளிட்ட வாசகர் வட்ட உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Previous Post Next Post