கிராமத்தில் தனியார் மதுபான கடை செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!


.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இந்த நிலையில் இந்த கிராமத்தில் தனியார் மனமகிழ் மன்றம் பார் மற்றும் கிளப் செயல்படுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை, கலாய்த்துறை உள்ளிட்டோரிடம் மனமகிழ் மன்றம்  திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போது கிராமத்தில் மனமகிழ் மன்றம் திறப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கிராம மக்களுக்கு கிடைத்த தகவலினை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராமத்தில் மது கடைகள் திறப்பதால் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் ஏற்படும் என வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கும் பெண்கள் தங்கள் கிராமத்தில் மதுபான கடை செயல்பட அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது...


பேட்டி: 

1. ராசாத்தி ( கிராம பொதுமக்கள் )
2. முத்துலட்சுமி ( கிராம பொதுமக்கள் )
Previous Post Next Post