விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் சாக்குளத்து மெட்டு சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.!




தேனி மாவட்டம் தேவாரம்– சாக்குலூத்து மெட்டு–கேரளா இணைப்புச் சாலை 
சாக்குலூத்து மெட்டு சாலை — 1981 முதல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழக–கேரள எல்லையில், தேவாரம்/டி.மீனாட்சிபுரம் வழியாக சாக்குலூத்து மெட்டு செல்ல கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் மலைச்சாலைத் திட்டம் 1981-ல் தொடங்கப்பட்டது.

 திட்டத்தின் நோக்கம் தேவாரம் பகுதியை கேரளா மாநிலம் நெடுங்கண்டம் உள்ளிட்ட இடுக்கி மாவட்டப் பகுதிகளுடன் நேரடியாக இணைப்பது இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் குழந்தைவேலு அடிக்கல் நாட்டினார்.

தேவாரம் மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து மலை அடிவாரம் வரை 12 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 853 அடிப்படையில் சாக்குலூத்து மெட்டு மலை அடிவாரப் பகுதியில் யானைகள் செல்லும் வழித்தடம் இருப்பதாக வனத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவே மலைப்பகுதியில் சாலை அமைப்பதற்கான வனத்துறை அனுமதியில் முக்கிய தடையாக இருக்கிறது.

 தேவாரம் முதல் சாக்குலூத்து மெட்டு வரை திட்டமிடப்பட்ட மொத்தப் பாதை சுமார் 20 கி.மீ. என்றும், அதில் மலைப்பகுதியில் சுமார்  க 4.5 கி.மீ. மட்டுமே வனத்துறை கட்டுப்பாடு குறிப்பாக அடர் வனம் எனக் கூறப்படும் ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதி ஆகும்.

2025 ஏப்ரலில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச் செல்வன் நாடாளுமன்ற உறுப்பினர்,
 அடுத்த படியாக தற்போதைய தவெக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா  ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.

 தேவாரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், உடும்பன்சோலை, கட்டப்பனை மற்றும் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளுக்கு செல்ல போடிநாயக்கனூர் மற்றும் கம்பம்,குமுளி சுற்றி சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. கடந்த மாதம் இந்த திட்டத்திற்கு 155கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற கோரி தேனி மாவட்டத்தின் தேவாரம் சுற்று வட்டாரப் பகுதியில் 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் பட்டினி போராட்டம் நடைபயண போராட்டம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தையும் தமிழகத்தின் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியையும் 4.5 கிலோ மீட்டர் தூரத்தை இணைத்தால் கேரளாவில் வேலைக்கு  செல்லக்கூடிய தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சென்றடைய வெறும் 20 நிமிடங்கள் ஆகும் மேலும் கேரளாவில் விளையக்கூடிய பணப் பயிர்களான ஏழாம் மிளகு காப்பி தேயிலை ரப்பர் உள்ளிட்ட விலைப் பொருட்களை மிக எளிதாக சாக்களத்துமட்டு சாலை வழியாக எடுத்துச் செல்ல முடியும் பொருளாதார மேம்படையும் தொழில் வளர்ச்சி அடையும் இப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  வழக்கறிஞர்  விநாயகர்மூர்த்தி_(எ)வில்லவன் மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு அவர்களை சந்தித்து 4.5 கிலோ மீட்டர் மலைச் சாலையை அமைத்து தர கோரிக்கை வைப்பதற்காக ஆய்வு செய்தோம்.

இந்நிகழ்வில் 
அயூப்கான் 
கம்பம் சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளர்,
 
மணியரசு 
மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் 

முனைவர் அமுதன் மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் 

மில்லர் கம்பம் ஒன்றிய செயலாளர் 

சுரேஷ் உத்தமபாளையம் பேரூர் செயலாளர் 

இரா.இராஜா
 சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர்.

 தேவாரம் மீனாட்சிபுரம் பெருமாள் கோவில் சாமி மீனாட்சி பழனிச்சாமி,
 
இளங்கோ அறக்கட்டளை தலைவர், 
சுப்பையா 
பெரியசாமி, ராவணன்,  மலைச்சாமி ஆகியோர்  சாக்கலூத்து மெட்டுச் சாலை பாதையை ஆய்வு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் மாண்புமிகு சமூக நீதி துறையின் அமைச்சர் வன்னியரசு அவர்களிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.....
Previous Post Next Post