வாலாஜா:-
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அமஸ்ஜித்), தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பக்திப் பெருக்குடன் தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைத்தூதர் இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை (ஈத்-உல்-அதா) தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, வாலாஜா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் இன்று காலை முதலே புத்தாடை அணிந்து, வாலாஜா பெரிய மசூதிக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
க
காலை சரியாக 8 மணிக்கு ஜிம்மா பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்புத் தொழுகை தொடங்கியது. மசூதியின் தலைமை இமாம் தொழுகையை முன்னின்று நடத்தினார்.
தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற சிறப்பு பயானில்
இப்ராஹிம் நபிகளாரின் அர்ப்பணிப்பு வாழ்வு மற்றும் தியாகம் குறித்து விளக்கப்பட்டது.
மனிதநேயம், ஈகைப் குணம் மற்றும் பிறருக்கு உதவும் நற்பண்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நாட்டில் அமைதி, வளம், மற்றும் மதநல்லிணக்கம் தழைத்தோங்க வேண்டி அனைவரும் கையேந்தி உருக்கமாகப் பிரார்த்தனை செய்தனர்.
இந்தத் தொழுகையில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் ஒரே அணியில் திரண்டு தொழுகை நடத்தினர். தொழுகை நிறைவடைந்ததும், ஒருவரையொருவர் கட்டித்தழுவி, "ஈத் முபாரக்" என மனமகிழ்ச்சியோடு தங்களின் பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
தொழுகை முடிந்த பின், தங்களின் வசதிக்கேற்ப குர்பானி (நன்மைக்காக விலங்குகளை பலியிடுதல்) கொடுத்து, அந்த இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும், சுற்றத்தாருக்கும் வழங்கி தங்களின் ஈகைப் பண்பினை வெளிப்படுத்தினர்.
மசூதி கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் இணைந்து இந்த சிறப்புத் தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர். வாலாஜா பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்புப் பணிகளும் வாலாஜா போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.