ராயக்கோட்டையில் ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பேராசிரியர் மு.திருப்பதி கலந்து கொண்டு உரையாற்றினார்


கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இம்மண்ணின் மைந்தரும் சமூக சேவகர் கல்வியாளருமான நெல்லை நாடார் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்லூரி துணை முதல்வர் மு.திருப்பதி கலந்து கொண்டு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ? கல்வி உதவி தொகையுடன் எப்படி படிப்பது கல்வி உதவித்தொகைகளை எப்படி பெறுவது? எந்தெந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளது என மாணவர்களிடையே எடுத்துரைத்தார் இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஆற்காடு நிறுவனர் கேசவராஜ் அவர்களும் முனைவர் திருமதி நளினிகேசவராஜ் அவர்களும் லூமினன்ஸ் ஏற்பாடுகளை செய்து இருந்தனர் இதில் ஆற்காடு தொண்டு நிறுவனம் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் பள்ளி பருவம் முடித்து உயர் கல்விக்காக காத்திருந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்
Previous Post Next Post