ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவார்கள் அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக திருவாரூர் மாவட்டம் மூணாறு தலைப்பு களில் இருந்து பிரியும் பாமணியாறு, கோரையாறு , வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட காட்சியளிக்கிறது ஆறுகள் முழுவதும் மண்டியுள்ள வெங்காய தாமரை செடி கொடிகள் மண்டி காடுகளாக காட்சியளிக்கிறது. இந்த ஆறுகளை நம்பி திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்து வருவார்கள். இரண்டு நாட்கள் மழை பெய்தால் ஆறுகளில் தண்ணீர் தேங்கி விவசாய பயிர்கள் மூழ்கி அழுக தொடங்கி விடும். எனவே ஆறுகளில் தலைப்பு பகுதிகளில் மண்டியுள்ள வெங்காய தாமரை செடி, கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஏற்கனவே சில ஆண்டுகளாக சரியான முறையில் குறுவை , சம்பா தாளடி விவசாய பணிகளை செய்ய முடியவில்லை அப்படி விவசாயம் செய்தால் மழை பெய்து கெடுக்கும் இல்லையென்றால் பாசணத்திற்கு தபோதிய தண்ணீர் கிடைக்காமல் வறண்டு கெடுக்கும் இந்த நிலையில் ஜுன் 12ந் தேதி தண்ணீர் திறப்பதற்கு முன்பு தமிழக முதல்வர் பொதுபணித்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளின் நிலையை கண்டு அவசர நடவடிக்கை எடுத்து ஆறுகளில் மண்டியுள்ள வெங்காய தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி :
1, கரிகாலன் விவசாயி