அதிமுகவின் ஆதரவை தவெக பெறுவார்கள் ஆனால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும். திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   

தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடாது கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆளுநர்  ஆட்சிக்கு வந்து விடக்கூடாது, 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சி என்கின்ற முறையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குத்தான் இருக்கிறது என்ற அடிப்படையில் வெளியிலிருந்து  ஆதரவளித்தோம். அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்பது அமைச்சரவை தீர்ப்புக்கு எதிரானது, நல்லாட்சி தருவேன் என்று கூறியதற்கு விரோதமாக இது அமைந்து விடும் அதிமுக திமுகவுக்கு  எதிராகத்தான் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அத்தகைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது மக்களின் தீர்ப்புக்கு எதிராக அமையும். அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். மீறி , அதிமுகவின் ஆதரவை அவர்கள் பெறுவார்கள் ஆனால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

வழிபாட்டு கூடங்கள், கல்வி நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் படிப்படியாக அடையாளம் காணப்பட்டு 717 கடைகள் மூடப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதுபோல் ரயில் நிலையங்களுக்கு அருகிலும் ஏராளமான கடைகள் உள்ளன. ரயில் நிலையங்களுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுபான கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். அதே நேரத்தில் அதில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்ப எந்தத் துறையில் வேலைவாய்ப்பை வழங்க வாய்ப்பு உள்ளதோ அந்த துறையில் பணி வழங்க வேண்டும்.

அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை புதிது அல்ல. மக்களின் நலன் கருதி நடக்கும் பிரச்சனை அல்ல இதனை அக்கட்சியினர் சரி செய்து கொள்வார்கள்.
Previous Post Next Post