கூத்தாநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.




திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 10 நாட்கள்  நடைபெறுவது வழக்கம். இந்நாட்களில் தினசரி அம்மனுக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனையும், இரவு பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா காட்சி என விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ் விழாவின் ஒரு பகுதியாக இன்று காலை ஸ்ரீமஹா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் பால் காவடி , செடில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து திருவிழாவின் இறுதி நாளான இன்று 300க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் தீ மிதி இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் பின்னர்  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது  .

FILE NAME : TVR MANNARGUDI MARIYAMMAN KOVIL FESTIVAL 25.05.2026
Previous Post Next Post