தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது இது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டெல்டா பாதுகாப்பு விவசாய சங்க தலைவர் . தர்ம சுவாமிநாதன் கூறுகையில் தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முதலமைச்சர் ஜோசப் விஜய் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் இளநீர் வரும் ஜூன் 1ஆம் தேதி தஞ்சாவூரில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
பேட்டி
1, தர்ம சுவாமிநாதன் டெல்டா பாசன பாதுகாப்பு சங்கம்
2 , கண்ணன் விவசாயிகள் கூட்டமைப்பு