திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விரைவுத் துலங்கல் குறியீட்டில் (QR Code) திருவள்ளுவர் திருவுருவப் படம் உருவாக்கிய ஆசிரியருக்கு பாராட்டு

 திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஶ்ரீராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் நல்லாசிரியர் த.பொன் ரேகா.இவர் தமிழ் சார்ந்தும், திருக்குறள் சார்ந்தும் பல்வேறு சாதனைகளையும், புதுமைகளையும் படைத்து வருபவர்.இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியரின் புதுவித முயற்சியாக, ஏழு அடி உருவத் திருவள்ளுவர் உருவத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் உரையுடன் கூடிய விரைவுத் துலங்கல் குறியீட்டை 1330 குறளுக்கு உருவாக்கி, அதில் ஒட்டி விரைவுத் துலங்கல் குறியீட்டில் திருவள்ளுவர் திருவுருவத்தைக் கொண்டு வந்து உள்ளார் ஆசிரியர் பொன் ரேகா.இதனை பெங்களூர் யூனிட்டி யுனிவர்ஸ் உலகச் சாதனை நிறுவனம் புதுவித உலகச் சாதனையாக அங்கீகரித்துள்ளது. பாரதியார் விருது, சிறந்த கல்விச் சிந்தனையாளர் விருது, சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது,அறிவொளி ஆசான் விருது மற்றும்  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் த.பொன் ரேகா அவர்களின் இத்தகைய புதுவித முயற்சியை பள்ளியின் தலைமையாசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
Previous Post Next Post