கலெக்டர் என்ன சுற்றுலாவா வந்திருக்கிறேன், அனைத்து ஆவணங்களும் தயாராக வைத்திருக்க வேண்டாமா என வி.ஏ.ஓ மற்றும் வட்டாச்சியரை வெழுத்து வாங்கிய ஆட்சியர் - ஒரே போனில் பேருந்து நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரிடம் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நிதி பெற்று தந்து - உசிலம்பட்டியில் கள ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அதிரடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.,


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.,

குறிஞ்சி நகர் பகுதியில் மலைவாழ் மக்கள், ரேசன் அட்டை இல்லை, ஆதாரில் குளறுபடியை சரி செய்ய முடியாத நிலை உள்ளிட்ட கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் முன் வைக்க, சம்மந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மலைவாழ் மக்களின் கோரிக்கை குறித்து ஆட்சியர் கேள்வி எழுப்ப, அவர் அமைதியாக இருந்ததுடன், எந்த ஆவணமும் எடுத்து வராமல் வந்திருந்ததைக் கண்டு கோபமடைந்து, வி.ஏ.ஓ மற்றும் வட்டாச்சியரிடம் கலெக்டர் சுற்றுலா ஏதும் வந்திருக்கேனா, அனைத்து ஆவணங்களும் தயாராக வைத்திருக்க வேண்டாமா என கடிந்து கொண்டார்., மேலும் ஒரு வார காலத்திற்குள் சிறப்பு முகாம் நடத்தி மலைவாழ் மக்களின் குறைகளை சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.,

தொடர்ந்து உசிலம்பட்டி புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வனிடம் போன் மூலமே கோரிக்கை வைத்த நிலையில், ஒரு உயர்மின் கோபுர விளக்கு தேவையாக இருந்தாலும், இரு உயர் மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கி தருவதாக உறுதி அளித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆட்சியர் நன்றி தெரிவித்தார்.,

தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியர் தாய் தந்தை திட்டியதால் விஷம் அருந்தி சிகிச்சைக்கு வந்திருந்த சிறுமியின் தாயாரிடம் குழந்தைகளுக்கு எவ்வாறு அறிவுரை வழங்க வேண்டும், அவருக்கு சிகிச்சை முடிந்தவுடன் மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்., கர்ப்பிணி தாய்மார்களை சந்தித்து நேரத்திற்கு நன்றாக உணவருந்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்த ஆட்சியர் உணவை உண்டு பரிசோதனை செய்தார்.,

தொடர்ந்து உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர், தமிழ்நாட்டிலேயே எனது மதுரை மாவட்டத்தில் மட்டுமே பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது என கடிந்து கொண்டார்., சுற்றுச்சுவர் அமைக்கும் இடத்தில் வனத்துறை அனுமதி பெற காலதாமதம் ஆகிறது என்பதற்காக, மற்ற பணிகளை செய்யாமல் வைத்திருப்பது ஏன் என்றும் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு சென்றார்.,
Previous Post Next Post