கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதிக்குஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் வந்து இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர்.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அவ்வப்போது சுற்றுலா வரும் இடங்களில் ஏதாவது அசம்பாவிதங்களை நிகழ்த்திவிட்டு செல்கின்றனர்.
தற்போது பள்ளிவாசல் இரண்டாம் மைல் அருகே தங்களது வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சுற்றுலா வரும் பயணிகளை சைட் சீன் செல்வதற்கு ஓட்டுனர்கள் கேட்டு வரும் சூழலில்
அதில் சுற்றுலா வந்த ஒரு கும்பல் மது போதையில் ஜீப்பின் மீது ஏறி அமர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்டனர்.
தனது வாகனத்தை கோயில் போல் மதித்து வருகிறோம் நீ செருப்பு அணிந்து வாகனத்தின் மீது ஏறுகிறாய் என்று கூறி கீழே இறங்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
தொடர்ந்து கும்பல் மதுபோதையில் இருந்ததால் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடிக்கும் காட்சி சிசிடிவி பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மூணார் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தவறு செய்த சுற்றுலாப் பயணிகளை விட்டுவிட்டு அப்பாவி ஓட்டுநர்களை தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சுற்றுலா பயணிகளால் தாக்கப்பட்ட ஓட்டுநர் சிகிச்சைக்காக தேனி காவி விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இச்சம்பவத்தால் மூணார் மற்றும் சுற்றியுள்ளபகுதிகளில் உள்ள ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .....