திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழ்பாதி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் அந்தப் பகுதியில் சாலை மற்றும் வயல் பகுதியில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாகவும் அருந்து விழும் நிலையில் உள்ளதால் இந்த பகுதி வழியாக பள்ளி , கல்லூரிக்குச், செல்லும் மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர் இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் , மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும் நேரடியாக சென்று மனு கொடுத்தும் இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கீழ்பாதி கிராமத்தில் பல்வேறு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஏதேனும் உயிர் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை இழுத்து கட்டியும் சாய்ந்து காணப்படும் மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைத்து தரவேண்டும் என கீழ்பாதி கிராம பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி அருகே அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை மின் வாரிய அதிகாரிகள் இழுத்து கட்டி சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழர் களம் மாத இதழ்
0