மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னாாகுடியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் திருவுறுவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னாாகுடியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் திருவுறுவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
தமிழக வரலாற்றில் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு மொழிப்போர். மொழிப்போரில் உயிரிழந்த தியாகிகள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் . மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் திருவுறுவ படத்திற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து பின்னர் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி , நகர செயலாளர் ஆர்.ஜிகுமாா் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம் , ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட அதிமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post