மதுரையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மேகமலைக்கு சுற்றுலா சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.!


தேனி மாவட்டம் முத்தம்பாளையம் தாலுகா சின்னமனூர் அருகே அமைந்துள்ள மேகமலையில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சுற்றுலா வந்துள்ளனர் மேகமலைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக வாகனம் விபத்துக்குள்ளானது இதில் 15 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் உடனடியாக உள்ளூர் வாசிகள் மற்றும் போக்குவரத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மன்னாதிமங்கலம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது.

 இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை இருப்பினும் சிறுமி உட்பட 19 நபர்கள் காயமடைந்ததாக முதல் தகவல் அறிக்கை தெரிய வருகிறது இது தொடர்பாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.......
Previous Post Next Post