ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம் இந்தியா முழுவதும் கடைபிடித்து வருகின்ற சூழலில்
இன்று மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி என்.சி.சி, மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் வாக்காளர் தின பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் துவங்கி கவணம்பட்டி சாலை, பேரையூர் சாலை, தேனி சாலை, தேவர் சிலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவுற்றது.,
இதில் என் வாக்கு விற்பனைக்கு அல்ல 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,