ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாதாலுக்கா நவலாக் அவரைக்கரை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு, கிராம தேவதையான ஸ்ரீ செல்லி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழா கிராமத்தின் நாட்டான்மைகளான
எம். ரவி
எம். ரேணு, ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பல்வேறு கிராமங்களிலிருந்து காளை மாடுகள் வரவழைக்கப்பட்டு பாரம்பரிய எருது ஆட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டு உற்சாகத்துடன் விழாவினை சிறப்பித்தனர். இவ்விழா 35 வருடங்களுக்குப் பிறகு நவலக் மற்றும் அவரக்கரை இரு நாட்டாமைதாரர்களும் இணைந்து நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது