உசிலம்பட்டி அருகே இரயில் பாதையை கடக்க முயன்ற மூதாட்டி, இரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் காத்தம்மாள், காது கேளாமை மாற்றுத்திறனாளியான இந்த மூதாட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் தென்னங்கீற்றை உரித்து பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.,



                                                     மூதாட்டி 

இன்று காலை வழக்கம் போல தென்னங்கீற்றை உரித்துவிட்டு இரயில் பாதையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து போடி நோக்கி சென்ற இரயில் மோதியதில் மூதாட்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.,


தகவலறிந்து விரைந்து வந்த மதுரை இரயில்வே போலீசார் மூதாட்டி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

Previous Post Next Post