ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் 47-ஆவது ஆண்டு எருது விடும் திருவிழா கோலாகலம்



ராணிப்பேட்டை, ஜன.24 :
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சி மாங்குப்பம்  கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 47-ஆவது ஆண்டு பாரம்பரிய எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு நந்தியாலம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி பூபாலன் தலைமை தாங்கினார்.
அக்கிராமத்தைச் சேர்ந்த விழா குழுவினர் முன்னிலை வகித்து கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து, விழா  நிகழ்ச்சினை சிறப்பாக நடத்தினர்.
இவ்விழாவை ராணிப்பேட்டை மாவட்டம் ஜி.கே. குழுமம் தலைவர் சந்தோஷ் காந்தி தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற எருது விடும் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற முதல்  எருது அதன் உரிமையாளரருகக்கு திமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி   சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார் 
1,15000
வழங்கினார் 

மேலும், போட்டியில் பங்கேற்ற பிற எருதுகளுக்கு ரொக்கமாக ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த எருது விடும் திருவிழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

இதில் திமுக ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏவி. நந்தகுமார், ஆற்காடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் 
 புவனேஸ்வரி சத்தியநாதன், ஆற்காடு ஒன்றிய துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ண மூர்த்தி,மாவட்ட பிரதிநிதி ஜெயபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் மார்க்கப்பந்து, கிளைச் செயலாளர் கருணாநிதி, ராஜா, இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Previous Post Next Post