மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து இரை தேடி தரை பகுதிக்கு வந்த 3 வயது மதிக்கத்தக்க மான்-யை நாய் துரத்தியுள்ளது.,
இதில் பயந்து ஓடிய மான் அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரது தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தது., இதனைக் கண்ட முருகன் மற்றும் ஊராட்சி செயலாளர் ரஞ்சித்குமார் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சுமார் 60 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மான்-யை கிணற்றில் இறங்கி கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.,
மேல கொண்டு வரப்பட்ட மான், கயிறை அவிழ்த்த உடனே தப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.,