சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் பங்கேற்பு
ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டம்:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியர் காயத்ரி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பின்னர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் எஸ்.ஆர்.பி. ராஜலட்சுமிதுரை வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு, மாணவிகளுடன் கலந்துரையாடி, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த விழாவில் திமுக நகர செயலாளர் ஏவி. சரவணன், நிர்வாகிகள் சிவா, சொக்கலிங்கம், எஸ்.ஆர்.பி. துரை, ரவிக்குமார், ஆசிரியர்கள் மாலினி உள்ளிட்டோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் கே. முரளி நன்றி கூறினார்.