மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில், இன்று 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில், இன்று 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை நடைபெற்றது. 
இம்முகாமில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தார். முன்னதாக ஊராட்சி செயலாளர் அவர்கள் ஊராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டங்களை வாசித்தார். 
இம்முகாமில் திட்ட அலுவலர், ஊராட்சி இயக்குநர், துணை இயக்குநர் (தொழுநோய்), வட்டாட்சியர், வட்டார ஒன்றிய அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர், நடமாடும் மருத்துவ குழுவினர்கள், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர்,திரு. சேக் அப்துல்லா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,திரு. வே.முருகேசன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு. முத்துமாயன், சுகாதார ஆய்வாளர்கள் திரு. செந்தில் கருப்பையா, கருப்பசாமி, ராஜகுருநாதன், சமுதாய செவிலியர் திருமதி ஆஷா, கிராம சுகாதார செவிலியர் ரூபி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பொது சுகாதார துறை சார்பாக  கீழ்கண்ட தீர்மானங்களை  கொசுக்கள் மூலம் பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குனியா மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்துதல், 
திறந்தவெளி கழிப்பறை இல்லாத கிராமாக உருவாக்குதல்,  குடற்புழு நீக்க மாத்திரைகள் வருடத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ளுதல், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசிகள்  போட்டுக்கொள்ளுதல், தேசிய காசநோய் விழிப்புணர்வு அளித்தல் மற்றும் இறுதியாக  தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
Previous Post Next Post