கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மத்திய மாநில அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆந்திராவைப் போல் பேரழிவை ஏற்படுத்தும் பெரியகுடி ஹைட்ரோ கார்பன் கிணறை திறக்க ஓஏன்ஜிசி  நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது ,  இஸ்மாயில் குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் ,  காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் , ஒஎன்ஜிசி கனரக வாகனங்களை டெல்டாவை விட்டு வெளியேற்ற  வேண்டும்   விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் மீது அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Previous Post Next Post