நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட அனைத்து தியாகி பிறந்த நாளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக விழா கொண்டாடப்படுகிறது அதன் தொடர்ச்சியாக
இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக
விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் விடியல் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கவிதை போட்டி, மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, மற்றும் வினாடி வினா போட்டிகள் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மட்டும் பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சௌடேஸ்வரி மற்றும் ஜமுனா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விளக்கமாக கூறினார்கள்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அனைவருக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் மகாலட்சுமி,தீனா,சசி,தினேஷ், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.