தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். தென்னகத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் புகழப்படும் இக்கோயிலுக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பிராஜா பெரும் முயற்சி காரணமாக தமிழக அரசு இந்து அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு ரூ.16 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக அண்மையில் பந்தக்கால் நடப்பட்டு, கோயிலின் ஈசானிய மூலையில் சுமார் 3,500 சதுரடி பரப்பளவில் பிரம்மாண்டா பிரம்மாண்டாமானயாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து கும்பாபிஷேக இறுதிக்கட்ட பணிகளான வர்ணம் பூசுதல் , சாரம் அமைத்தல் ,எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயில் கடந்த 2010ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குறிப்பிடதக்கது கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யபட்டு வருகிறது.