கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்,சாலை அமைப்பதற்கு நீர் வழி பாதைகள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை உயர் மட்ட குழு அமைத்து ஆய்வு செய்திட வேண்டும் பி ஆர்.பாண்டியன் பி,அய்யாக்கண்ணு வேண்டுகோள்.


பிப்ரவரி 7ல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை  விவசாயிகள் யாத்திரை துவக்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்,சாலை அமைப்பதற்கு நீர் வழி பாதைகள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை உயர் மட்ட குழு அமைத்து ஆய்வு செய்திட வேண்டும் பி ஆர்.பாண்டியன் பி,அய்யாக்கண்ணு 
வேண்டுகோள்.

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் கன்னியாகுமரி மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குமரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வின்ஸ்ஆண்றோ தலைமையற்றார். 

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக ஒருங்கிணைப்பாளர் 
பி ஆர் பாண்டியன், தலைவர் 
பி.அய்யாகண்ணு ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு
 எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்.இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்  வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை அனைத்து மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளனர்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் கடந்த 2024-25 ஆம் ஆண்டில் 145 நாட்களைக் கடந்து உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். இதனை அடுத்து உச்சநீதிமன்றம் நீதி அரசர் நவாப் சிங் தலைமையில் குழு அமைத்து போராட்டக் களத்தில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உடன் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. 

பாராளுமன்ற வேளாண்மைக்கான நிலைக்குழு தலைவர் சன்னி தலைமையிலான குழு போராட்ட களத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பியூஸ் கோயல், பிரகலாத்ஜோஷி  அடங்கிய குழு மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இறுதியாக எம் எஸ் பி க்கு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க கூடிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் வர்த்தகர்களையும் இந்தியா முழுவதும் கருத்து கேட்ட பிறகு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பியூஸ் கோயல் கேட்டுக்கொண்டதை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.அதற்கு பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. 

இந்நிலையில் கடந்த ஜனவரி 9ம் தேதி நீதி அரசர் நவாப்சிங் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. விவசாயி தரப்பில் உச்சநீதிமன்றம் பரிந்துறைப்பதோடு நின்று விடாமல், விரைந்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம். 
இந்நிலையில் இந்தியா முழுமையிலும் இருக்கிற பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்து இக் கோரிக்கைக்கு ஆதரவு கோர முடிவெடுக்கப்பட்டுள்ளது, இதற்கான யாத்திரை பிப்ரவரி 7ல் குமரிமுனையில்தொடங்க உள்ளது. 

குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைகள் அமைப்பதற்கும், ரயில் பாதைகள் அமைப்பதற்கும் ஆறுகள் குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் வழி தடங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். இதனால் பாசன வடிகால் தடைபட்டுள்ளது, பாலங்கள் அமைத்து நீர்வழிப்பாதைகள் தடை செய்யாமல் அமைக்க வேண்டும். நீர் வழித்தடங்களை அடைத்து பாசன கால்வாய்களை தடுத்து அமைப்பதை ஏற்க முடியாது.இதனால் மிகப்பெரிய பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்
எனவே தமிழக அரசு உடனடியாக விரைந்து உயர்மட்ட குழுவை அமைத்து ஆய்வு செய்து விவசாயிகளை பாதிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

மரபணு விதைகளை தடுக்க வேண்டும். வேளாண் துறையில் பணியிட மாற்றங்கள் உள்நோக்கத்தோடு நடைபெறுவதாகவும்,அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றனர். 

நிகழ்ச்சியில் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
எல் ஆதிமூலம்,
டெல்டா ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென்மண்டல தலைவர்எஸ் ஓ மாணிக்கவாசகம், மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண்,நெல்லை மண்டல தலைவர் புளியரை செல்லத்துரை,
தென்காசி மாவட்ட செயலாளர் மகாலிங்கம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ், நெல்லை மாவட்ட செயலாளர் ஆபிரகாம்,மாவட்ட தலைவர் மாரியப்ப தேவர், குமரி மாவட்ட தலைவர் எஸ் தானு பிள்ளை,
துணை தலைவர் V.முருகேச பிள்ளை,
பொருளாளர் செண்பகசேகரன் துணை செயலாளர்கள் ஹென்றி, C. அருள், D தேவதாஸ்
உயர் மட்டக் குழு உறுப்பினர் 
பா அசோகன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.


Previous Post Next Post