தமிழ்நாடு அரசு 50% ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது,
தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மனதார வரவேற்கின்றோம், 50% சதவீத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நல்ல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன அதை நாங்கள் வரவேற்கின்றோம்.,
இதே நேரத்தில் ஊழியர்களின் 10% பங்களிப்பு இல்லாமல் இந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஏற்கனவே ஜாக்டோ ஜூயோ அமைப்பின் சார்பில் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 6 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம் இன்று அதை வாபஸ் பெற்றுள்ளோம்.,
மீதமுள்ள 9 கோரிக்கைகளான ஊதிய முரண்பாடு, அரசனை 243 ஐ ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு பரிசீலித்து நிறவேற்ற வேண்டும் என பேட்டியளித்தார்.,
பேட்டி : முருகன் ( தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் )