உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுங்கி இருந்து விவசாயியை அச்சுறுத்தி வந்த 15 அடி நீள மலைப்பாம்பை 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் தோட்டத்து பகுதியில் பதுங்கி இருந்து, அச்சுறுத்தி வருவதோடு, அங்கு வளர்ந்து வரும் கோழிகளை சந்தேகப்படும்படியான உயிரினம் அழித்து வந்தாக கூறப்படுகிறது.,
15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தோட்டத்து பகுதியில் வளம் வந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெகதீஸ், உசிலம்பட்டி சிவாலயம் வன உயிரின பாதுகாப்பு குழுவினருக்கு வனத்துறை உதவியுடன் தகவல் அளித்தனர்.,

இந்த தகவலின் பேரில் தன்னார்வ அமைப்பின் சார்பில் தனுஷ் என்ற இளைஞர் தலைமையில் நேரில் ஆய்வு செய்த குழுவினர், தோட்டத்து பகுதியில் முட் புதருக்குள் பதுங்கி இருந்த 15 நீளமுள்ள மலை பாம்பை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்., 

வனத்துறை அலுவலர்களும் ராட்சத மலை பாம்பை கைப்பற்றி வனபகுதியில் விடுவித்தனர்.தோட்டத்து பகுதியில் அச்சுறுத்தி வந்த மலை பாம்பை சாதூர்யமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,
Previous Post Next Post