திண்டிவனம் ஜன.2
விழுப்புரம் மாவட்டம் தனியார் பள்ளி அரங்கில் திண்டிவனம் பிரிண்டிங் அசோசியேஷன் சார்பாக சங்கத்தின் 2026 வருடம் காலண்டர், இனிப்பு வழங்கும் விழா மற்றும் 2026ம் வருட முதல் மாத ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொருளாளர் முனியப்பன் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது தொடர்ந்து அணைவரும் புத்தாண்டு வாழ்த்து கூறி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.