பிப்ரவரி இறுதி வரை காவிரி டெல்டாவிற்கு பாசண நீர் தேவை.பிப்ரவரி 8ல் நாகையில்விவசாயிகள் மகா சபைபிஆர்.பாண்டியன்.

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் SKM (NP) நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினம் அருகே மீனம்பநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் 
புலியூர் பாலசுப்பிரமணியன் தலைமையேற்றார். மாநில அமைப்பு செயலாளர் 
எஸ் ஸ்ரீதர் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் கே எஸ் பாலு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் 
பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

காவிரி டெல்டா மாவட்டங்களில் டித்வா புயல் தாக்குதலால் சம்பா தாளடி பயிர்கள் காலங்கடந்து மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.பல இடங்களில் மழையால் அழிந்து மறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது

சுமார் 5 லட்சம் ஏக்கரில் தற்போது பயிர் வளரும் நிலையில் உள்ளது. பிப்ரவரி இறுதி வரையிலும் பாசன தண்ணீர் தேவை உள்ளது, எனவே தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கி பிப்ரவரி இறுதிவரை காவிரியில் தேவையான பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசன தண்ணீரை விடுவித்து சிக்கனமாக பயன்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடக்கை எடுக்க வேண்டும். தற்போது அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டித்வா புயல் தாக்குதலால் பெருமளவில் பயிர்கள் அழிந்து உள்ளது.தற்போது தமிழக அரசு சுமார் 30மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 116 கோடி ரூபாய் நிவாரணம் என்பது யாணை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
டிஜிட்டல் கணக்கெடுப்பு என்கிற பெயரில் 10% நிலங்கள் கூட கணக்கில் கொள்ளப்படவில்லை.
கணக்கெடுப்பு என்பது மிக மோசமான மோசடி நடவடிக்கையாகும்.

காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழு இழப்பீடு பெற்று தர வேண்டும்.மாறாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு வேளாண் துறை துணை போவதை அனுமதிக்க முடியாது.

எம் எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வந்திடவும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பெற்ற வேளாண் கடன் முழுவதும் தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் 30 பேர் கொண்டு விவசாயிகள் குழு யாத்திரை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்க உள்ளது. 

பிப்ரவரி 8ஆம் தேதி மாலை நாகப்பட்டினத்தில் டெல்டா தழுவிய அளவில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றம் மாபெரும் மகாசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பயண குழு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகள்
பெருமளவில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும். 

விவசாயிகளுக்கான வாழ்வாதார பிரச்சனையை முன்வைத்து நிரந்தர தீர்வு காண்பதற்கான வாய்ப்பை உருவாக்குகிற பயணமாகும். மத்திய அரசு மூன்று அமைச்சர்கள்
குழு மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனை இறுதிப் படுத்துகின்ற வகையில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு கோருவதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன் செயலாளர் குடவாசல் சரவணன் நாகை மாவட்ட செயலாளர் வேதை கருனைநாதன்  உயர் மட்டக் குழு உறுப்பினர் குடவாசல் அசோகன் மாவட்ட பொருளாளர் சபா துணை செயலாளர் வெங்கடேசன் வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் ரவி நாகை ஒன்றிய செயலாளர் செல்லப்பா,
திருவாரூர் ஒன்றிய செயலாளர் அறிவு,
திருமருகல் ஒன்றிய செயலாளர் பரமசிவம், துணைச்செயலாளர் குமார் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.


Previous Post Next Post