உத்தமபாளையம் வாய்க்காலில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.


உத்தமபாளையம் பைபாஸ் அருகே வாய்க்காலில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சமூக ஆர்வலர் ஏ கே அபுதாகீர் தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.


 இறந்தது யார் இவர் எவ்வாறு இறந்தார் என விசாரித்த போது உத்தமபாளையம் கீரை மேட்டு தெருவை சேர்ந்தவர் இன்னாசி மகன் அலெக்சாண்டர் என்பதும் இவர் அப்பகுதியில் வயல்வெளிகளுக்கு வரப்புகள் வெட்ட தண்ணி பாய்ச்சுவதற்கு கூலி வேலைக்கு சென்று வருவார் என அக்கம் பக்கத்தினர் கூறியதை தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர் அலெக்சாண்டர்.54 வயது.


 விரைந்து வந்த அலெக்சாண்டரின் இரண்டாவது மகன் கிளிண்டன் இறந்தது எங்களது தந்தை தான் என அடையாளப் படுத்தினார். மேலும் நேற்று காலை வீட்டை விட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை நாங்கள் பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்தோம் என காவல்துறையிடம் கூறினார்.  அலெக்சாண்டருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் மூத்த மகன் அந்தோணி திருமணம் ஆகி உள்ளார் இளைய மகன் கிளிண்டன் என்பதும் கடந்த 40 நாட்களுக்கு முன்னதாக அலெக்சாண்டரின் மனைவி வேதம்மாள் உடல் நலக்குறைவால் இறந்ததும் குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்........
Previous Post Next Post