நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் கொண்டாட்டம் அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்பு



இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திராவிட பொங்கல் விழா ஒன்றிய கழகச் செயலாளர் வடிவேலு அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.

ஆட்டுப்பாக்கம் ஊராட்சி, மஞ்சம்பாடி கிராமத்தில் உள்ள பிரேம் நிகேதன் ஆதரவற்றோர் விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவ மாணவிகளோடு திராவிட பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கினார். விடுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வேட்டி, சட்டை ஆகிய புத்தாடைகள் மற்றும் காலண்டர் ஆகியவற்றை வழங்கி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து குடும்ப அட்டைகாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 மற்றும் பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை வழங்கி, அனைவரது குடும்பகளிலும் குதூகலமாக பொங்க, பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக உருவாக்க அயாராவது பாடுபட்டு வருகிறார் முதலமைச்சர் அவர்கள். என்று குறிப்பிட்டு அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளிட்ட கழகத்தினர் திரளாக கலந்து கொண்டு, திராவிட பொங்கல் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Previous Post Next Post