நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக
5 ம் ஆண்டாக புத்தகத் திருவிழா பத்து நாட்களாக நடைபெற்றது இதில் மாணவர்களுக்கு தினந்தோறும் போட்டிகள் வைத்து சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது
நிறைவு நாளாக பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி வில்லுப்பாட்டு சிறுகதை எழுதுதல் சிறுகதை வாசித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது ஏராளமான மாணவர்கள் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது இனிய நிகழ்வில் ராஜாராம் வேல்யூம் ஜீரோ பேசன் நிர்வாக இயக்குனர், பந்தல் நாகராஜ், ரெயின்போ காமராஜ், பஞ்சலை சண்முகம், சமூக சேவகர் சித்ரா, அரசு மாதிரி மேல்நிலை தலைமையாசிரியர் காந்தாரூபி, சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, திக சரவணன், ராஜவடிவேல்,தீனா, தினக்கல்வி சசி, ஜமுனா, ராணி, சித்ரா, சௌடேஸ்வரி,ஆல்வின் சுமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புத்தகத் திருவிழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கி அனைவருக்கும் விடியல் பிரகாஷ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.