ஆற்காடு 17-வது வார்டில் பொங்கல் தொகுப்பு வழங்கல் – எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் தொடங்கி வைத்தார்


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரத்திற்கு உட்பட்ட 17-வது வார்டில் செயல்பட்டு வரும் பகுதி நேர நியாய விலை கடையில், வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொங்கல் தொகுப்புகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன்,
துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன்,
திமுக நகர செயலாளர் ஏ.வி. சரவணன்,
17-வது வார்டு கவுன்சிலர் குணா என்கிற குணசேகரன்,
உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் இந்த தொகுப்பு, பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது.
Previous Post Next Post