வரகூர் கிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி – பொதுமக்கள் மகிழ்ச்சி



திமிரி:
திமிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வரகூர் கிராமத்தில், வரவிருக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அக்கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், திமிரி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவரும், திமிரி திமுக மதிய ஒன்றிய செயலாளருமான ரமேஷ் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜனார்தனன் ஆகியோர் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.

மேலும், இந்நிகழ்வில் வரகூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர் கோமதி, ஒன்றிய குழு கவுன்சிலர் வசந்தா சுரேஷ், மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசின் சார்பில் வழங்கப்பட்ட இந்த பொங்கல் தொகுப்பு, பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Previous Post Next Post