இப்பகுதியில் செயல்படும் கர்னல் ஜான் பென்னிகுவிக் சங்கம் சார்பில் தொடர்ந்து 14 ஆண்டுகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா மற்றும் தை திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று பொங்கல் வைத்து விழா தொடங்கிய நிலையில் இன்று சிறுவர் சிறுமியர்களுக்கான மியூசிக் சேர், ஓட்டப்பந்தயம், பானை உடைத்தல், கோலப்போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஆண்கள் பெண்கள் என ஏராளமான கலந்துகொண்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா வைத்து மக்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதை மற்ற பகுதியை சேர்ந்த மக்கள் திடீர் நகர் மக்களை பாராட்டி சென்றனர்......