சின்னமனூரில் ரவுண்டான பகுதியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகிய அண்ணா திமுக நகர் கழகச் செயலாளர் பிச்சைக்கனி அவர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.!


தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்ட எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஜக்கையன் அவர்களுக்கு நகர செயலாளர் பிச்சைக்கனி பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து  சின்னமனூர் நகர் கழக செயலாளர் பிச்சை கனி தலைமையில் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தக்காளி சாதம் புளி சாதம், பொங்கல் அன்னதானத்தை வாங்கி சென்றனர்.
என் நிகழ்வில் சின்னமனூர் நகர அதிமுக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மகளிர் அணி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்......
Previous Post Next Post