சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் V. ஹரிகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகிக்க, சாசன செயலாளர் M. தீபக்குமார் பொருளாளர் N. கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை R. கண்ணகி அனைவரையும் வரவேற்று பேசுகையில், மாணவிகள் வட்ட அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசுகள் வென்று வந்ததை பெருமையாக குறிப்பிட்டார்கள். உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பு ஆசிரியை நிருபா பிளவர் குயின் அவர்களின் வழிகாட்டுதலில் நடத்தினர். சங்கத்தின் உறுப்பினர்கள் R. அருள், S. சிவக்குமார், பள்ளியின் இசை ஆசிரியை K. மீனாட்சி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியை K. கவிதா மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் P. அன்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் P. சஞ்சீவ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் சங்கத்தின் செயலாளர் K. புகழேந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.
Previous Post Next Post