சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொள்ளிடக்கறையில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் இருளர் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் கடுமையான மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் V. ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார் சாசன தலைவர் P. முகமது யாசின் சாசன செயலாளர் M. தீபக்குமார் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் தேர்வு M. கமல்கிஷோர் ஜெயின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற இருளர் குடியிருப்பில் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அறிந்து சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி தங்கத்தின் உறுப்பினர்கள் பங்களிப்பில் 5 கிலோ அரிசி போர்வை பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர்.
இந்நிகழ்வில் தலைவர் தேர்வு N. கேசவன் சிறப்பு திட்டங்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பாளர் I. யாசின், உறுப்பினர்கள் D. உதயம், M. சுஷில்குமார் சல்லாணி, P. சஞ்சீவ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.